நீட் முடிவுகள் இணையத்திலிருந்து நீக்கம்
10:24 October 17
நீடி முடிவுகள் குளறுபடிகளுடன் வெளியானதைத் தொடர்ந்து, முடிவுகள் குறித்த புள்ளிவிவரப் பட்டியலை தேசிய தேர்வு முகமை இணையத்திலிருந்து நீக்கியுள்ளது.
இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. கரோனா பரவலுக்கு மத்தியிலும் இந்த ஆண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13ஆம் நடைபெற்றது. நாடு முழுவதுமிருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் எழுதிய இத்தேர்வின் முடிவுகளை நேற்று (அக்.17) தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
அதில், திரிபுரா, உத்தரகாண்ட், தெலங்கானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்வு எழுதியவர்களைவிட அதிக நபர்கள் தேர்ச்சிபெற்றுள்ளதாக புள்ளிவிவரப் பட்டியலில் தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களின் தேர்ச்சி விகிதத்தில் ஏற்றம் இறக்கம் எனப் பல குளறுபடிகள் இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து, முடிவுகள் குறித்த புள்ளிவிவரப் பட்டியலை தேசிய தேர்வு முகமை இணையத்திலிருந்து நீக்கியுள்ளது.