தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நீட், ஜே.இ.இ தேர்வு தேதி அறிவிப்பு

NEET
NEET

By

Published : Jul 3, 2020, 5:18 PM IST

Updated : Jul 3, 2020, 8:40 PM IST

17:13 July 03

கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில், செப்டம்பர் 13ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வு மே 3ஆம் தேதி நடைபெறவிருந்தது. கரோனா வைரஸ் நோயின் காரணமாக ஜூலை 26ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதனிடையே, தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், செப்டம்பர் 13ஆம் தேதிக்கு தேர்வை ஒத்திவைத்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதேபோல், ஐஐடி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் போன்ற தொழில் கல்வி படிப்பதற்கான ஜே.இ.இ. முதன்மை நுழைவுத் தேர்வு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடத்தப்படும் எனவும், ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27ஆம் தேதி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறுகையில், "கல்வியின் தரத்தை உறுதி செய்யவும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க:அதிகார அத்துமீறல்: லாக்கப் டார்ச்சரால் வாழ்க்கையை இழந்து நீதிக்காக காத்திருக்கும் யேசுதாஸ்

Last Updated : Jul 3, 2020, 8:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details