தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? - சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது - Kanpur news

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நீட் தேர்வு நடத்தப்படுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூதாட்டம்
சூதாட்டம்

By

Published : Aug 29, 2020, 7:21 PM IST

கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. தேர்வுகளை ஒத்திவைக்க கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்வு நடத்தப்படும் என ஒரு கும்பலும் தேர்வு நடத்த படாது எனக்கூறி மற்றொரு கும்பலும், உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் சூதாட்டத்தில் ஈடுபட்டன. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேரை கைது செய்தனர். ஆனால் அதில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி தப்பித்து சென்றுவிட்டார்.

இது குறித்து கான்பூர் எஸ்பி தீபக் கூறுகையில், "சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 38.25 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் சூதாட்டத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி தப்பி ஓடிவிட்டார்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details