தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசு பணியில் பெண்களுக்கு 33%, இலவச கல்வி... காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கவனிக்க தவறிய அம்சங்கள்!

மக்களவைத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான நீட் தேர்தவிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீங்கள் கவனிக்க தவறிய முக்கிய அம்சங்கள் இதோ:

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ராகுல்

By

Published : Apr 2, 2019, 7:02 PM IST

டெல்லியில் அக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழச்சியில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழு தலைவருமான ப.சிதம்பரம் ஆகியோர் அதனை வெளியிட்டனர். வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்னை, பெண்கள் பாதுகாப்பு ஆகிய மூன்று முக்கியமான பிரச்னைகள் பிரதானமாக வைத்து இந்த தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தொண்டர்கள்
  • ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு தனி பட்ஜெட். விவசாயிகளை கடன் தள்ளுபடியிலிருந்து மீட்டு கடனிலிருந்து முக்தி அளிக்கப்படும். குறைந்த விலையில் விவசாய இடுபொருட்கள், எளிதான கடன் வசதி, விளை பொருளுக்கு உரிய விலை வழங்கப்படும்.
  • நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்கு செலவு செய்யப்படும்.
  • சுகாதார உரிமைச் சட்டம் (Right to Healthcare Act) இயற்றப்ப்பட்டு, நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை, இலவச வெளி நோயாளிகள் சிகிச்சை, இலவச மருந்துக்கள், இலவச மருத்துவமனை வசதி வழங்கப்படும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் வலைபின்னல் மூலம் இந்த வசதி வழங்கப்படும்.
  • அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படும்; ஏழைகளுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்.
  • பொதுத்துறை நிறுவனங்களில் 34 லட்சம் வேலைவாய்ப்பு; 4 லட்சம் அரசு வேலைகள் மார்ச் 2020-க்குள் நிரப்பப்படும்.
  • கிராம பஞ்சாயத்துகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளில் 10 லட்சம் புதிய சேவா மித்ரா பணியிடங்கள் உருவாக்கப்படும்.
  • வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் தனியார் நிறுவனங்களுக்கு சலுகை; புதிதாக தொழில் தொடங்குவோருக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு அனுமதி தேவையில்லை.

தொடர்புடைய செய்தி:

வேலைவாய்ப்பை உருவாக்க ராகுல் கூறும் 4 ஐடியாக்கள்!

  • 100 நாள் வேலைத் திட்டம் என்று அழைக்கப்படும் மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.
  • வறுமை கோட்டிற்கு கீழுள்ள ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் நியாய் திட்டம் செயல்படுத்தப்படும்; மாதந்தோறும் பயனாளிகளின் வங்கி கணக்கில் 6 ஆயிரம் ரூபாய் நேரடியாக செலுத்தப்படும். இதன்மூலம் 25 கோடி குடும்பங்கள் பயனடைவர்.
  • அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். ஜிஎஸ்டி விகிதம் எளிமைபடுத்தப்படும். பஞ்சாயத்து, நகராட்சிகளுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து பங்கு வழங்கப்படும்.
  • நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும். அதற்கு மாற்றாக மாநில அளவில் தரமான தேர்வு நடத்தப்படும்.
  • அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான கல்வி கட்டாயம் மற்றும் இலவசம்.
  • 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரிலேயே நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்படும்
  • அனைத்து மத்திய அரசு பணிகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு.
    அரசு வேலையில் பெண்களுக்கு 33%

நான் பொய் சொல்ல மாட்டேன். எது நடைமுறையில் சாத்தியமோ அதைத்தான் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல அம்சங்கள் கவர்ச்சிகரமாக இருந்தாலும் நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுகிறது.

இதையும் படிங்க...

வேலைவாய்ப்பா? தேசபாதுகாப்பா? - மக்களுக்கு எது பிரதானம்?

ABOUT THE AUTHOR

...view details