நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு இன்று (செப்டம்பர் 13) நடைபெற்று வருகிறது. இதில் புதுச்சேரியில் இருந்து சுமார் 7, 137 மாணவர்கள் தேர்வெழுதி வருகின்றனர்.
அதற்கென புதுச்சேரியில் 15 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, அதற்காக சிறப்பு பேருந்து வசதிகளையும் புதுச்சேரி அரசு செய்துள்ளது. தேர்வு மையங்களுக்கு சென்ற மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டும், கிருமி நாசினி வழங்கப்பட்டும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.