நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வின்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருவது தொடர் கதையாகியுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கான உடைக் கட்டுப்பாடுகளை தேசிய தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், 14 நகரங்களில் 188 தேர்வு எழுதும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேசியத் தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதேபோல், ஃபோனி புயல் பாதித்த இடங்களில் நீட் தேர்வினை ஒத்திவைப்பது குறித்து எந்த எண்ணமும் இல்லை. பாதிப்பு இல்லாத இடங்களைத் தேர்வு செய்து தேர்வினை நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் பேசி வருகிறோம்.
மேலும் கடைசி நேரத்தில் கிடைக்கப்பெற்ற மையங்கள் மற்றும் மாணவர்களின் தேவை ஆகியவற்றை வைத்து தேர்வு மையங்கள் மாற்றியமைப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் கவலையடையத் தேவையில்லை. நீட் தேர்வு விண்ணப்பத்தில் மாணவர்கள் இரண்டாவதாகத் தேர்வு செய்த இடங்களிலேயே தேர்வு மையம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நெல்லையில் அமைக்கப்பட்டிருந்த ஒரு தேர்வு மையம் மதுரைக்கு மற்றியமைக்கப்பட்டுள்ளது.
தேர்வறைக்கு மாணவர்கள் எடுத்து வரவேண்டியவை:
- புகைப்படம் ஒட்டிய ஹால் டிக்கெட்
- ஆதார் கார்டு