நாடு முழுவதும் நீட் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது கேள்விகளில் தங்களுக்கு ஆட்சேபனை இருப்பதாகக் கூறி இரு மனுதாரர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணையில் இருந்தும் நீட் முடிவுகள் வெளியீடு - தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ்!
நீட் தேர்வில் இரண்டு கேள்விகள் குறித்து ஆட்சேபனை தெரிவித்தும் அதை கண்டுகொள்ளாமல் தேர்வு முடிவுகளை வெளியிட்டது குறித்து பதிலளிக்க தேசிய தேர்வு முகமைக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Neet
இந்த வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே அக்டோபர் 16ஆம் தேதி தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தங்களின் ஆட்சேபனைகளை கண்டுகொள்ளாமல் தேசிய தேர்வு முகமை, தேர்வு முடிவுகளை வெளியிட்டதாக நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
இதையடுத்து இதுதொடர்பாக பதிலளிக்குமாறு கூறி தேசிய தேர்வு முகமைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.