தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நீர் தேர்வு 2020: என்ஆர்ஐ ஒதுக்கீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறை வெளியீடு! - என்ஆர்ஐ ஒதுக்கீடுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறை வெளியீடு!

டெல்லி: 2020 நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது ஒதுக்கீட்டை என்ஆர்ஐ பிரிவில் பதிவு செய்ய அக்டோபர் 23ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

eet
neet

By

Published : Oct 22, 2020, 6:47 PM IST

2020 நீட் தேர்வு எழுதிய மாணவர்கள், என்ஆர்ஐ ஒதுக்கீட்டின் கீழ் மாறி விண்ணப்பிக்கும் வழிமுறைகளை மருத்துவ ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 15 விழுக்காடு இடங்கள் என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டுக்கு போகின்றன. இந்த ஒதுக்கீடு வெளிநாடு வாழ் இந்தியரான மாணவ மாணவிகளுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. ஒரு மாணவரின் முழு கட்டணச் செலவையும் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் ஏற்க தயாராக இருந்தாலும் இடம் கிடைத்துவிடும். அதாவது வெளிநாடு வாழ் உறவினரோ நண்பரோ அந்த மாணவருக்கான கட்டணம் செலுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும் சீட் கிடைத்திட அதிக வாய்ப்புள்ளது.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “என்ஆர்ஐ ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், சம்பந்தப்பட்ட ஆவணங்களை குறிப்பிட்ட அலுவலர்களுக்கு அக்டோபர் 23ஆம் தேதிக்குள் nri.adgmemcc1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்கு மருத்துவ ஆலோசனைக் குழுவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை (https://mcc.nic.in) பார்வையிடலாம்” என குறிப்பிட்டுள்ளனர்.

கீழே குறிப்பிட்டுள்ள லிங்க்கில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்துக்கொள்ளலாம்:

https://mcc.nic.in/UGCounselling/Home/ShowPdfType=E0184ADEDF913B076626646D3F52C3B49C39AD6D&ID=CD0613BA91FBAB0C5AF2827E308E487E267D28A0

ABOUT THE AUTHOR

...view details