தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மாநில வருவாயை அதிகரிக்க எம்எல்ஏக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும்'- கிரண்பேடி - Puducherry State News

புதுச்சேரி: மாநில வருவாயை அதிகரிக்க சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

Deputy Governor Kiran Bedi
Deputy Governor Kiran Bedi

By

Published : May 23, 2020, 3:08 PM IST

இது குறித்து அவர் வாட்ஸ்அப் பதிவில், "புதுச்சேரி ஆளுநர் மாளிகையானது அரசிற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக மதுக்கடைகள் உரிமைகளை ஏலம் எடுக்க ஒரு பொதுவான கொள்கையை உருவாக்க வலியுறுத்தி வருகிறது. அதன் மூலம் மாநில வருவாயை கணிசமாக உயர்த்த கலால்துறையில் வெளிப்படையான மேலாண்மை உருவாகும்.

அதனால் தனியார் கல்வி நிறுவனங்களில் சொத்துகளுக்கு வரிவிதிப்பு, கேளிக்கை வரி மீட்டெடுப்பு, நகராட்சி சேவைகளுக்கு பயனாளிகள் கட்டணம் வசூலிப்பை முறைபடுத்துதல், மின்சாரம், வணிக வரி, சொத்து வரி உள்பட பல நிலுவைத் தொகைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம்.

அதையடுத்து காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் கடிதத்தின் அடிப்படையில், கூடுதலாக புதுச்சேரி அரசு திட்டங்களை செயல்படுத்தினால் ரூ. 4 ஆயிரம் கோடி அரசு பெறமுடியும். அவரது கடிதத்தை புதுச்சேரி அரசு பரிசீலிக்க வேண்டும். மாநில வருவாயை அதிகரிக்க சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'மதுபான கடைகளுக்கு வெளிப்படையான ஏலமுறை' - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தகவல்

ABOUT THE AUTHOR

...view details