உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் நிறுவனம், இந்திய விமான நிலைய ஆணையம் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாநாடு ஒன்றை நிகழ்த்தியது. காணொலி காட்சி மூலம் நிகழ்ந்த இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:
"கல்லீரலில் வைரஸ் தொற்று ஏற்படுவது தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஆனால் இதுபற்றி மருத்துவ சேவை புரிவோருக்கும், பொதுமக்களுக்கும் பெரிய அளவில் தெரிவதில்லை.
கல்லீரலில் பி மற்றும் சி வகை வைரஸ் தொற்று இருப்பவர்களுக்கு, கல்லீரல் புற்று நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாகவுள்ளது. தற்போது 80 விழுக்காடு வரையிலான பொதுமக்களுக்கு நாள்பட்ட கல்லீரல் பிரச்னையும், கல்லீரலில் வைரஸ் தொற்று தங்களுக்கு இருப்பதும் தெரியாமலேயே உள்ளனர்.