தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா மருந்தை விநியோகம் செய்வதற்கான திட்டத்தை அறிவிக்க வேண்டும் - ராகுல் காந்தி

டெல்லி : கரோனா மருந்தை அனைவருக்கும் விநியோகம் செய்வதற்கான திட்டத்தை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

By

Published : Aug 14, 2020, 12:48 PM IST

நாட்டில் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனாவுக்கான மருந்தைக் கண்டுபிடிக்க உலக விஞ்ஞானிகள் தவித்து வந்த நிலையில், மூன்று கட்ட ஆய்வகப் பரிசோதனைக்கு மருந்தை உட்படுத்தாமலேயே தடுப்பூசியைக் கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்தது. இதனிடையே, அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகளில் தடுப்பூசிக்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கரோனா மருந்தை அனைவருக்கும் மலிவான விலையில் விநியோகம் செய்வதற்கான திட்டத்தை, அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனாவுக்கான மருந்துகளை தயாரித்து வெளியிடவுள்ள உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இந்தக் கரோனா தடுப்பூசியைக் கண்டறிந்து வெளியிட்டதும், அதை மலிவான விலையில் அனைவருக்கும் முறையாக விநியோகம் செய்வதற்கான, தெளிவான திட்டம் தேவை. எனவே அத்தகைய திட்டத்தை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறையவில்லை என்றும், கரோனா பாதிப்புகள் அச்சமூட்டும் விதமாக உள்ளன என்றும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: பிகார் வெள்ளம்; தர்பங்கா மாவட்டம் கடும் பாதிப்பு, உயிரிழப்பு 25ஆக உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details