தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊரடங்கை மீறிய 2,353 வாகன ஓட்டிகளுக்கு அபராதம்: 115 வாகனங்கள் பறிமுதல்!

நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் கரோனா ஊடங்கை மீறிய 2,300 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் 115 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.

தேசியச் செய்திகள்  வாகன ஓட்டிகள் அபராதம்  நொய்டா  noida news  national news in tamil  lockdown violation vehicles seized
ஊரடங்கை மீறிய 2,353 வாகன ஓட்டிகளுக்கு அபராதம்: 115 வாகனங்கள் பறிமுதல்

By

Published : May 21, 2020, 12:59 PM IST

நொய்டா கௌதம புத்தா நகர் காவல் துறையினர், நான்காம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவந்தனர்.

அதன்படி, இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும், இருவரும் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் கார், ஆட்டோவில் ஓட்டுநரைத் தவிர இருவர் மட்டுமே பயணிக்கவேண்டும் என்றும் கடந்த மே 19ஆம் தேதி விதிமுறைகளை அறிவித்தனர்.

இந்நிலையில், விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருந்த வாகன ஓட்டிகள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.டெல்லியை ஒட்டியுள்ள மாவட்டங்களில், 5,353 வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும் அதில் விதிகளை மீறிய 2,300 வாகனங்களுக்கு அபராதம் விதித்து, 115 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுவரை, கௌதம புத்தா நகர் காவல் துறையினர் வாகன ஓட்டிகளிடமிருந்து அபராதமாக 36, 200 ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:காங்கிரஸ் கனவான நியாய் திட்டம் சத்தீஸ்கரில் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details