தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் இன்று பள்ளிகள் திறப்பு! - kashmir News

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதி நீக்கப்பட்டு இரண்டு மாதங்களான நிலையில், பள்ளத்தாக்குப் பகுதிகளில் இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

Kashmir

By

Published : Oct 3, 2019, 9:02 AM IST

காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதியை மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்ததன் மூலம் நீக்கியது. இதனைத் தொடர்ந்து, அங்கு பதற்றம் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது. ஆனால், ஆசிரியர்கள் பள்ளிகளுக்குச் சென்ற போதிலும் மாணவர்கள் செல்லாததால் பள்ளிகள் திறக்கப்படாமல்போனது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இரண்டு மாதங்களான நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பள்ளிகள் இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகள் அக்டோபர் 9ஆம் தேதி திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மருத்துவக் கல்லூரிகள் அங்கு செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், திறக்கப்படாத இரண்டு மாதங்களுக்கான கட்டணங்களை மாணவர்களிடமிருந்து பள்ளிகள் வசூலிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details