அண்டை மாநிலமான கேரளாவில், பிரபல கேரள மேட்ரிமோனி இணையதளம் செயல்பட்டுவருகிறது. இந்த இணையதளத்தில் சுமார் ஒரு லட்சம் மலையாளிகள் தங்களின் வாழ்க்கைத் துணைக்காக காத்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் 61 விழுக்காடு பேர் தங்களுக்கான சுயவிவரத்தை தானே தொடங்கியுள்ளனர். மீதமுள்ளவர்களில் 14 விழுக்காடு பேர் பெற்றோர் ஆவார்கள். மீதமுள்ளவர்கள் மணமகன் அல்லது மணமகளின் சகோதரன், சகோதரிகள் அல்லது நண்பர்கள் ஆவார்கள்.
58 விழுக்காடு பெண்கள் தங்களின் வாழ்க்கைத் துணைக்காக காத்திருக்கின்றனர். அவர்கள் 23-27 வயதிற்குள்பட்டவர்கள். காத்திருக்கும் 50 விழுக்காடு ஆண்கள் 26-30 வயதிற்குள்பட்டவர்கள் ஆவார்கள்.
இவர்களில் 30 விழுக்காடு ஆண்கள், 18 விழுக்காடு பெண்கள் சாதி மறுப்புத் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலும் பட்டம், பட்டயம், பொறியியல் பட்டதாரிகள் ஆவார்கள்.
39 விழுக்காடு பெண்களும் 19 விழுக்காடு ஆண்களும் தங்களுக்கு வரும் மணமகன், மணமகள் பட்டமேற்படிப்பு படித்திருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.