தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2 மணி நேரத்தில் 1.5 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு! - இந்திய ரயில்வே

டெல்லி: ஜூலை 1ஆம் தேதிமுதல் இயங்கவுள்ள சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

Train Tickets
Train Tickets

By

Published : May 21, 2020, 4:05 PM IST

இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் ரயில் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன. இந்நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜூலை 1ஆம் தேதிமுதல் முதல்கட்டமாக 200 பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்தது.

இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு இணையதளம் வழியே தொடங்கியது. முன்பதிவு தொடங்கப்பட்ட முக்கிய ரயில்களில் டுரோன்டோ ரயில்கள், ஜான் சதாப்தி ரயில்கள், பூர்வா விரைவு ரயில்கள் ஆகியவையும் அடங்கும்.

இது குறித்து ரயில்வே துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "இன்று 73 ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மதியம் 12 மணி வரை ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 25 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன" என்றார்.

ஜூலை 1ஆம் தேதிமுதல் இயக்கப்படும் இந்தச் சிறப்பு ரயில்களில் குளிர்சாதன பெட்டிகள், குளிர்சாதனமல்லாத பெட்டிகள் என இரண்டும் இருக்கும் என்றும் இந்த ரயில்களில் அனைத்துப் பெட்டிகளும் முன்பதிவு பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முன்பதிவின்றி இந்தச் சிறப்பு ரயில்களில் பயணிக்க முடியாது.

இந்நிலையில், ரயில் சேவையை அதிகரிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்: 'விரைவில் பயணிகள் ரயில் சேவை அதிகரிக்கப்படும்' - பியூஸ் கோயல்

ABOUT THE AUTHOR

...view details