அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், தேமாஜி, பிஸ்வந்த், திப்ரூகர், பார்பேட்டா, பாக்ஸா, சச்சார், சிவசாகர், சானிட்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ன.
இந்தப் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் படையினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த மாவட்டங்களில் 24 கிராமப் பகுதிகள் அதிகமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில், தேமாஜி, பிஸ்வந்த், திப்ரூகர், பார்பேட்டா பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இங்குள்ள சாலைகளும் சேதமடைந்துள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெள்ளத்தில் சிக்கி எட்டு லட்சத்து மூன்று ஆயிரம் எண்ணிக்கையிலான வளர்ப்பு விலங்குகள் உயிரிழந்துள்ளன. இந்நிலையில், தேசிய பேரிடம் மீட்புக் படையுடன் இணைந்து அசாம் மாநில பேரிடம் மீட்பு படை மற்றும் உள்ளூர் நிர்வாகிகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:'109 எம்எல்ஏக்கள் ஆதரவு: ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க முடியாது' - அவினாஷ் பாண்டே