தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மருத்துவர் மீது பாலியல் புகார்: தேசிய பெண்கள் ஆணையம் விசாரணை!

டெல்லி: ஃபரிதாபாத் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் மிது பாலியல் புகார் வந்துள்ளதால், அவரை விசாரிக்கக் கோரி தேசிய பெண்கள் ஆணையம், மருத்துவமனைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

தேசிய பெண்கள் ஆணையம்
தேசிய பெண்கள் ஆணையம்

By

Published : May 23, 2020, 7:14 PM IST

டெல்லி ஃபரிதாபாத் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் பணிபுரியும் கியூஆர்ஜி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் சந்தீப் என்பவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும், தனக்கு நடந்தது போல் பல பெண்களுக்கும் மருத்துவர் சந்தீப் பாலியல் தொந்தரவு கொடுத்துவருவதாக குறிப்பிட்டிருந்தார். இதைக் கண்ட தேசிய பெண்கள் ஆணையம், இது குறித்து நடவடிக்கை எடுக்க முயன்றபோது அந்த பெண் தனது பதிவை நீக்கினார்.

இதனையடுத்து, தேசிய பெண்கள் ஆணையம் கியூஆர்ஜி மருத்துவமனை இயக்குநர் சங்கீதா ராய் குப்தாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில், “மருத்துவர் சந்தீப் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக புகார்கள் வந்துள்ளன. இது குறித்து அவரிடம் மருத்துவ நிர்வாகம் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், விரிவான நடவடிக்கை எடுத்தது குறித்து ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தது.

இதையும் படிங்க: ஒரே பகுதியில் இரு சிறுமிகள் பாலியல் வன்புணர்வு!

ABOUT THE AUTHOR

...view details