மும்பையைச் சேர்ந்த மாடல் பெண் ஒருவர் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனால், 2013ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகச் சமீபத்தில் புகார் அளித்தார். இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவென்று விளக்குமாறு, மகாராஷ்டிரா காவல் துறைத் தலைவருக்கு (டிஜிபி) தேசிய பெண்கள் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.
மும்பையைச் சேர்ந்த மாடல் பெண் பத்திரிகை ஒன்றுக்குச் சமீபத்தில் பேட்டி அளித்தார். அதில், 2013ஆம் ஆண்டு ஹேமந்த் சோரன், சுரேஷ் நாக்ரே ஆகியோரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், இது குறித்து வெளியே சொல்லக் கூடாது எனவும் தன்னையும், தனது குடும்பத்தாரையும் மிரட்டினர் என்றார்.