நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஹத்ராஸ் கும்பல் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்ணுக்கு நீதிகேட்டு போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அதே நேரத்தில், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள நால்வருக்கு ஆதரவாக வலதுசாரி குழுக்களான பஜ்ரங் தளம், ஆர்.எஸ்.எஸ்., கர்ணி சேனா, பாஜக அமைப்பினர் கூடுகைகள் நடத்திவருகின்றனர்.
அத்துடன், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி உயிரிழந்த இளம்பெண் மீது அருவருக்கத்தக்க குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர்.
அந்த வகையில் உத்தரப் பிரதேசம் மாநிலம் பராதங்கியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ரஞ்சீத் பகதூர் ஸ்ரீவாஸ்தவா ஆவணத்தோடு கூறிய அருவருக்கத்தக்க கருத்துக் கூறி குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.
அவரது சர்ச்சைக்குரிய அந்தக் கருத்திற்குப் பதிலளித்த தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.