தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நகைச்சுவையாளருக்குப் பாலியல் ரீதியில் அச்சுறுத்தல்: நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் கடிதம்! - நகைச்சுவையாளருக்கு பாலியல் ரீதியில் அச்சுறுத்தல்

குஜராத் காவல் தலைமை இயக்குநருக்கு தேசிய மகளிர் ஆணையம் எழுதிய கடிதத்தில், சமூக ஊடகங்களில் ஒரு நகைச்சுவையாளர் மீது பாலியல் ரீதியில் ஒருவர் அச்சுறுத்தல் கொடுக்கும்படியாக பேசியுள்ள காணொலியைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தேசிய மகளிர் ஆணையம்
தேசிய மகளிர் ஆணையம்

By

Published : Jul 13, 2020, 1:38 PM IST

டெல்லி: பெண்ணுக்குப் பாலியல் ரீதியில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக காணொலி வெளியிட்ட நபரை, உடனடியாக கைதுசெய்து விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணையம் (National Commission for Women) உத்தரவிட்டுள்ளது.

குஜராத் காவல் தலைமை இயக்குநருக்கு தேசிய மகளிர் ஆணையம் (National Commission for Women) எழுதிய கடிதத்தில், 'சமூக ஊடகங்களில் ஒரு நகைச்சுவையாளர் மீது பாலியல் ரீதியில் ஒருவர் அச்சுறுத்தல் கொடுக்கும்படியாக பேசியுள்ள காணொலியைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும்' அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

"பெண்களுக்கு இணையத்தில் பாதுகாப்பான இடத்தை உருவாக்குவதற்கும், பெண்களுக்கு இணையப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேசிய மகளிர் ஆணையம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. மேலும், இணையத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக உடனடி விசாரணை தேவை'' என்றும் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஸ்வப்னா தங்கக் கடத்தல் வழக்கு: என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்!

இச்சம்பவத்தின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, தகவல் தொழில் நுட்பச் சட்டம், 2000 பிரிவின் கீழ், அதுகுறித்த அறிக்கையை தேசிய மகளிர் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ABOUT THE AUTHOR

...view details