தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹத்ராஸ் விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டவர்களுக்கு நோட்டீஸ்

டெல்லி: ஹத்ராஸில் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளான பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட பாஜக தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா, மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக்விஜய சிங் ஆகியோருக்கு தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஹத்ராஸ் விவகாரம்
ஹத்ராஸ் விவகாரம்

By

Published : Oct 6, 2020, 9:56 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது மதிக்கத்தக்க பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார்.

அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல்துறையினரே தகனம் செய்ததால் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி உத்திரப்பிரதேச அரசு பரிந்துரை செய்துள்ளது.

இதற்கிடையே, பாஜக தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா, மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக்விஜய் சிங், நடிகை ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டனர்.பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட காரணத்திற்காகவும், குறிப்பிட்ட அந்த பதிவினை நீக்கவும் தேசிய பெண்கள் ஆணையம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து தேசிய பெண்கள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இம்மாதிரியான செயலில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஹத்ராஸில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details