தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உயிரிழந்த பட்டியலின பெண்ணின் குடும்பத்திற்கு தேசிய பெண்கள் ஆணையம் துணை நிற்கும்!

டெல்லி: கும்பல் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்திற்கு முடிந்த அனைத்து உதவிகளையும் உறுதிசெய்துள்ளதாக தேசிய பெண்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த தலித் பெண்ணின் குடும்பத்திற்கு தேசிய பெண்கள் ஆணையம் துணை நிற்கும்!
உயிரிழந்த தலித் பெண்ணின் குடும்பத்திற்கு தேசிய பெண்கள் ஆணையம் துணை நிற்கும்!

By

Published : Sep 30, 2020, 1:17 AM IST

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு ஆதிக்கச் சாதி ஆண்களால் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார்.

முதுகெலும்பு உடைந்து, நாக்கு வெட்டப்பட்டு பலத்த காயங்களோடு டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 15 நாள்களாக உயிருக்குப் போராடிவந்த அவர் இன்று உயிரிழந்தார்.

இதனிடையே, உயிரிழந்த அந்தப் பெண்ணின் வீட்டாரை குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நால்வரின் குடும்பத்தினர் மிரட்டல்விடுத்து, அச்சுறுத்திவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் (என்.சி.டபிள்யூ) தலைவர் ரேகா சர்மா கூறுகையில், ”மனிதர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு காட்டுமிராண்டித்தனமான இந்தக் கும்பல் பாலியல் வல்லுறவு வன்கொடுமை சம்பவம் குறித்து ஆணைக்குழு தன்னியக்கமாக அறிந்துகொண்டது.

இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உத்தரப் பிரதேச காவல் துறையினரிடமிருந்து அதிகாரப்பூர்வமான அறிக்கையைக் கோரியுள்ளோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

அதேபோல, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நீதியைப் பெற்றுத் தர ஆணையம் துணை நிற்கும். அவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க உறுதியளிக்கிறது.

என்.சி.டபிள்யூ உறுப்பினர் ராஜுல் தேசாய் பாதிக்கப்பட்டவரின் சகோதரரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். ஆணையத்தால் முடிந்த அனைத்து உதவிகளையும் குடும்பத்திற்கு வழங்கப்படும்" என்று அவர் கூறினார்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த பட்டியலின இளம்பெண்ணுக்கு நீதிக்கேட்டும், உத்தரப் பிரதேச அரசைக் கண்டித்தும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details