டெல்லி: மகாராஷ்டிராவில் நாகாலாந்தைச் சேர்ந்த பெண்களை துன்புறுத்துவது தொடர்பான பல்வேறு வழக்குகள் குறித்து விசாரித்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் (என்.சி.டபிள்யூ) மாநிலத்தின் காவல் தலைமை இயக்குநர் சுபோத் குமார் ஜெய்ஸ்வாலுக்கு கடிதம் எழுதியுள்ளது.
மேலும், வழக்குகள் குறித்த தகவல்கள் அடங்கிய அறிக்கையை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளது. இது தொடர்ச்சியாக நாகாலாந்து பெண்கள் ஐந்து பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அது தொடர்பாக இரு வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், செய்தி ஊடகங்களில் பெரிதாகப் பேசப்பட்டது.