குற்றவாளிகள், அடையாளம் தெரியாத இறந்த உடல்கள், காணாமல் போன, கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் நபர்களை அடையாளம் காண தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) மேம்படுத்த தானியங்கி தொழில்நுட்ப முறையை (ஏ.எஃப்.ஆர்.எஸ்) பயன்படுத்தலாம் என்று, உள்துறை அமைச்சகம் புதன்கிழமை மாநிலங்களவையில் அறிவித்தது.
குற்றவாளிகளை தெளிவாக அடையாளம் காணும் நோக்கத்துடன், மேம்படுத்தப்பட்ட தானியங்கி தொழில்நுட்ப முறையை (AFRS) செயல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதை உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.