தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜேஎன்யூ தாக்குதல்: சுப்ரியா சுலே கண்டனம்! - JNU attack

புனே: ஜேஎன்யூ மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தேசியவாத கங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் சுப்ரியா சுலே கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

Supriya Sule on JNU attack
Supriya Sule on JNU attack

By

Published : Jan 6, 2020, 3:53 PM IST

நேற்று மாலை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது முகமூடி அணிந்திருந்த சிலர் மிருகத்தனமான தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில், ஜேஎன்யூ மாணவர் சங்கத்தின் தலைவர் அய்ஷே கோஷ் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர்.

இத்தாக்குதல் குறித்து பாராமதி நாடாளுமன்ற உறுப்பினரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மகளுமான சுப்பிரியா சுலே கூறுகையில், "டெல்லியில் காவல்துறை, உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, அமைச்சர் அமித் ஷா இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் ஆபத்தானது. இதுபோன்ற தாக்குதல்கள் தேசிய ஒறுமைப்பாட்டின் மீது சந்தேகத்தை எழுப்புகிறது" என்றார்.

ஜேஎன்யூ மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஜே.என்.யூ. வன்முறை: 4 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details