மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று அறிவித்தார். இந்நிலையில் உத்தவ் தாக்கரேவை சமாதானம் செய்ய முயற்சிக்கப்படும் என சரத் பவார் கூறியுள்ளார்.
இது குறித்து சரத் பவார் அளித்த பேட்டியில், “கூட்டணி கட்சிகளை கையாள்வது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 29 கட்சிகள் அங்கம் வகித்தன. இடதுசாரிகளின் கொள்கை வேறுபட்டாலும் நாங்கள் அவர்களையும் அரவணைத்து சென்றோம்.
தற்போது மகாராஷ்டிராவில் மூன்று கட்சிகளின் கூட்டணி நடக்கிறது. ஆகவே, இவ்விவகாரத்தை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தி உத்தவ் தாக்கரேவை சமாதானப்படுத்த முயற்சிப்போம். உத்தவ் தாக்கரே அவரது பார்வையில் இதனை சொல்லியிருக்கிறார்.