தேசிய மாநாட்டு கட்சி சார்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூன்ச் பகுதியில் மக்களவைத் தேர்தலுக்காக பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய தேசிய மாநாட்டு கட்சியின் மூத்தத் தலைவர் ஜாவேத் அகமத் ரானா, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார்.
மோடியை கொலைக் குற்றத்தின் கீழ் கைது செய்வேன் - தேசிய மாநாட்டு கட்சி பிரமுகர் சர்ச்சை பேச்சு - கீழ்
ஸ்ரீநகர்: "எனக்கு வாய்ப்புக் கிடைத்தால் பிரதமராக இருக்கும் மோடியை கொலைக் குற்றத்தில் கைது செய்வேன்" என தேசிய மாநாட்டு கட்சியின் மூத்தத் தலைவர் ஜாவேத் அகமத் ரானா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோடியை கொலைக் குற்றத்தின் கீழ் கைது செய்வேன்-தேசிய மாநாட்டு கட்சி பிரமுகர் சர்ச்சை பேச்சு
தனக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்தால் ஜம்மு காஷ்மீர் உட்பட நாட்டில் நடக்கும் அனைத்து கொலை குற்றத்திலும் மோடியை சிக்க வைப்பேன் எனவும், அதே வழக்குகளில் அவரை கைது செய்வேன் எனவும் ரானா கூறினார்.