மத்திய பிரதேசம், பாலக்ஹத் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். நவர்வாஹீ, ராயலி கொதப்பா ஆகிய பகுதிகளை ஒன்றிணைக்கும் இடத்தில் இறந்தவரின் உடலை காவல்துறையினர் கண்டெடுத்தனர். தொடர்ந்து காவல்துறை நடத்திய முதல்கட்ட விசாரணையில், இறந்தவரின் பெயர் சோனு என்பது தெரியவந்தது.
மேலும் அவர் உடல் மேல் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கண்டெக்கப்பட்டது. அதில், அந்த இளைஞர் காவல்துறையினருக்கு உளவுப் பார்த்து வந்ததாகவும் அதனால் அவரை நக்சலைட்டுகள் கொன்றதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.