ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் மகாவீர் முண்டா என்ற 30 வயது மதிக்கத்தக்க இளைஞரை ஆயுதம் ஏந்திய நால்வர் கடத்திச் சென்றதாக அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவந்த காவல் துறையினருக்கு, மகாவீர் முண்டாவின் வயல்வெளிக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் ஒரு சடலம் ஒன்று கிடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
'துப்பு கொடுத்ததால் கொன்றோம்' - சடலத்துடன் துண்டுச் சீட்டை விட்டுச்சென்ற நக்சல்கள் - 30 வயது இளைஞரை கடத்தி கொலை செய்த நக்சல்கள்
ராஞ்சி: நக்சல்கள் குறித்து காவலர்களுக்கு துப்பு கொடுத்ததாகக் கூறி, 30 வயது இளைஞரை நக்சல்கள் சிலர் கடத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
naxals-murder-jharkhand-man-for-being-a-police-informer
பின்னர், சம்பவ இடத்திற்கு முண்டாவின் சகோதரியை காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். அவர் சடலம் முண்டாவுடையது என உறுதிசெய்தார். இந்நிலையில், இவரது கொலைக்கு நக்சல்கள் பொறுப்பேற்றுள்ளனர். மேலும், முண்டாவின் உடலோடு, காவல் துறையினரிடம் தங்கள் குறித்த தகவலைக் கூறியதால் அவரைக் கொலை செய்ததாகவும் துண்டுச் சீட்டில் எழுதிவைத்துள்ளனர்.