தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜக தலைவர் வீட்டை குண்டு வைத்து தகர்த்த நக்சல்கள்..! - Bihar BJP leader's residence

கயா: பீகாரில் பாஜக தலைவர் வீட்டை வெடி குண்டு வைத்து தகர்த்துள்ள நக்சல்கள் தேர்தலை புறக்கணிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

குண்டு வைத்து தகர்க்கப்பட்ட வீடு

By

Published : Mar 28, 2019, 10:06 AM IST

Updated : Mar 28, 2019, 10:38 AM IST

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள துமாரியா (Dumariya) பகுதியிலுள்ள முன்னாள் எம்.எல்.சி.யும் பாஜக தலைவருமான அனுஜ் குமார் சிங்கின் (Anuj Kumar Singh) வீட்டை நக்சல்கள் நேற்றிரவு வெடி குண்டு வைத்து தகர்த்துள்ளனர். அங்கு தேர்தலை புறக்கணிக்க கோரும் போஸ்டர்களையும் அவர்கள் விட்டுச்சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Last Updated : Mar 28, 2019, 10:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details