சத்தீஸ்கர் மாநிலத்தில் தம்தாரி என்ற மாவட்டத்தில் நக்சல் ஒருவரை காவலர்கள் சுட்டுக் கொன்றதாக மூத்த காவல் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொலை - நாகிரி காவல் நிலையம்
ராய்ப்பூர்: மாவோயிஸ்டுகளின் கோப்ரா லாஸ் உறுப்பினரான நக்சல் ஒருவரை மாவட்ட ரிசர்வ் காவலர்கள் சுட்டுக் கொன்றனர்.
இது குறித்து அவர் கூறியதாவது; தம்தாரி மாவட்டத்தில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோராகான் கிராமத்தில் உள்ள ஒரு காட்டில், நேற்று (ஆகஸ்ட் 30) இரவு நக்சல் ஒருவரை காவலர்கள் சுட்டுக் கொன்றனர்.
மாவட்ட ரிசர்வ் காவலர்கள் குழு ரோந்து பணியில் இருக்கும்போது, இச்சம்பவம் நடைபெற்றது. இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. பின்னர் விசாரணை மேற்கொண்டதில், இறந்தவர் மாவோயிஸ்டுகளின் கோப்ரா லாஸ் (உள்ளூர் அமைப்பு அணியின்) உறுப்பினராக செயல்பட்டு வந்த ரவி என்பது தெரியவந்தது" என்றார்.