ஒடிசா மாநிலம், பிஜிபூர் அருகே சிஆர்பிஎப் வீரர்கள் இருவர், டவுன் பகுதியில் இருந்து பைக்கில் முகாமிற்கு நேற்று சென்று கொண்டிருந்தனர். முகாமிற்கு அருகில் சென்றபோது, நக்சலைட்கள் மண்ணில் புதைத்து வைத்திருந்த வெடிக்குண்டு வெடித்து சிதறியது.
நக்சலைட் தாக்குதலில் இரண்டு சிஆர்பிஎப் வீரர்கள் படுகாயம்! - crpf jawans
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் நக்சலைட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு சிஆர்பிஎப் வீரர்கள் படுகாயமடைந்தனர்.
நக்சல் தாக்குதலில் சிக்கிய பைக்
இதில் இரண்டு வீரர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இட்த்திற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதேபோல் மே.1ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம், காசிரோலி பகுதியில் நக்சலைட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 16 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானது குறிப்பிடதக்கது.