மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரவுலி மாவட்டத்தின் வனப் பகுதியான குன்வுர்வாகியில் பாதுகாப்புப் படை வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையை நடத்திக் கொண்டிருந்தனர். அச்சமயத்தில் அங்கு திடீரென வந்த நக்சல் வீராங்கனைகள், பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
2 பெண் நக்சல்களை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படை! - சுட்டு கொன்றது பாதுகாப்புப் படை
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தங்கள் மீது தாக்குதல் நடத்த வந்த இரு பெண் நக்சல் வீராங்கனைகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
2 பெண் நக்சல்களை சுட்டு கொன்றது பாதுகாப்புப் படை!
சற்றும் எதிர்பாராத நேரத்தில் இத்தாக்குதல் அரங்கேற, எதிர்த்தாக்குதலை நடத்தினர் பாதுகாப்புப் படை வீரர்கள். இதில் இரு நக்சல் படை வீராங்கனைகள் சம்பவ இடத்திலேயே மடிந்தனர். இச்சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு வட்டாரங்கள், அவசர ஆலோசனை நடத்தி வருகின்றது.