ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 30 ஆம் தேதி முதல் ஐந்து கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் லதேஹர் மாவட்டத்தில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காவல் துறையினர் மீது நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால் காவல் துறையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.