நாளை (டிச.4) கடற்படை தினத்தை முன்னிட்டு விசாகப்பட்டினம் ஆர்கே கடற்கரையில் அதற்குரிய ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், அரசு அலுவலர்கள், கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியக் கடற்படையின் பெருமையையும், பலத்தையும் விவரிக்கும் பொருட்டு கடற்படை சார்பில் டீசர் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியக் கடற்படை வெளியிட்டிருந்த டீசர் இந்த டீசரில், இந்தியக் கடற்படையினர் பயன்படுத்தும் சாதனங்கள், ஆயுதங்கள், போர்க் கப்பல்கள், விமானங்கள் இடம்பெற்றுள்ளன.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்றும் கடற்படை தின நிகழ்ச்சியில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார்.
காற்றுமாசு வலையில் சிக்கும் இந்திய நகரங்கள்