பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சராக முன்னாள் ராணுவத் தளபதியும், காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான அமரீந்தர் சிங் பதவி வகித்துவருகிறார்.
காங்கிரசில் அடுத்த சர்ச்சை; பஞ்சாப் அமைச்சர் திடீர் ராஜினாமா! - etv bharat
சண்டிகர்: பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நவ்ஜோத் சிங் சித்து கடிதம் எழுதியுள்ளார்.
இவரது அமைச்சரவையில் சுற்றுலா, கலாசாரத் துறை அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து இருந்துவந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர், அமரீந்தர் சிங் தனது அமைச்சரவையை மாற்றியமைத்தார். அதில், நவ்ஜோத் சிங் சித்துவுக்கு வேறு துறை ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த அவர், புதிய அமைச்சர் பொறுப்பை ஏற்காமல் காலம் தாழ்த்திவந்தார்.
இந்நிலையில், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இவர் எழுதிய கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.