கரோனா பரவல் இந்தாண்டு மார்ச் மாதத்திற்குப் பின் இந்தியாவில் தீவிரமடைந்தது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துசெய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கரோனாவில் தாக்கம் தற்போதுவரை முழுமையாக குறையாததால் பல்வேறு மாநிலங்களிலும் இன்னும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில், 2020-21ஆம் கல்வி ஆண்டில் நடத்தப்பட வேண்டிய தேர்வுகள் உள்ளிட்டவை குறித்த தெளிவான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "வரும் கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்பு குறித்து இதுவரை எவ்வித தெளிவான வழிகாட்டுதல்களும் இல்லை. இதன் காரணமாக மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.