தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சரியான பாதையில் அழைத்துச் செல்லும் நிர்மலா! - கரிம வேளாண்மை

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததன் மூலம் இந்தியாவை சரியான பாதையில் அழைத்து சென்றுள்ளார் என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நவநீதகிருஷ்ணன்

By

Published : Jul 23, 2019, 10:35 PM IST

மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் இன்று மாநிலங்களவையில் இயற்கை விவசாயம் குறித்த விவாதத்தில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், "மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததன் மூலம் இந்தியாவை சரியான பாதையில் அழைத்து சென்றுள்ளார்.

இயற்கை விவசாயம் மேல் நிர்மலா நம்பிக்கை வைத்துள்ளார் என்பது அவர் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை மூலம் தெரிகிறது. நமது நாடு ஒரு விவசாய நாடு. ஆனால் நிலங்கள் அனைவரிடமும் இல்லை. இரண்டு விதமாக இந்தியாவில் விவசாயம் செய்யப்படுகிறது. ஒன்று நவீன முறையில் செய்யும் விவசாயம், மற்றோன்று பாரம்பரிய முறையில் செய்யப்படும் விவசாயம். பாரம்பரிய முறையில் செய்யப்படும் விவசாயத்தை இந்த அரசு ஊக்கப்படுத்த வேண்டும். தேவையான இடங்களில் நவீன முறைகளை பயன்படுத்த வேண்டும்.

ஏழை விவசாயிகளை உதவும் வகையில் அவர்களுக்கு ஊதியம் உயர்த்தித்தரப்பட வேண்டும். இதற்கு அனைத்து மாநில அரசுகளும் உதவிட வேண்டும். பாரம்பரிய முறையில் விவசாயம் செய்தாலே விவசாயிகளுக்கு உதவிய முடியும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details