தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கோயம்புத்தூரில் 11ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறின.
பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர் ஜெயா பச்சன், குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து அடித்துக் கொல்ல வேண்டும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், Change.org என்ற இணையதளத்தில் 15 லட்சம் பேர் ஹைதராபாத் பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
பெங்களூருவில்கால்நடை மருத்துவர்கள் ஒன்றுகூடி, கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பெண்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலர் கூட, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் தடுப்பதற்கு குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மலிவால், பெண்களுக்கு எதிரான பாலியன் சீண்டல்களைத் தடுக்க காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆறுமாதத்திற்குள் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கிட வேண்டும் என போராட்டக்காரர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:‘நாம் இணைந்தால் என்ன என மோடி கேட்டார், நான் முடியாது என்று சொல்லிவிட்டேன்’ - சரத் பவார்