இந்தியாவின் நவீன புள்ளி விவரங்களின் தந்தை என்று அழைக்கப்படும் பிரசாந்தா சந்திர மஹலனோபிஸ் 1893ஆம் ஆண்டு இதே தினத்தில் (ஜூன் 29) பிறந்தார். அவரின் பிறந்தநாளான இன்று தேசிய புள்ளிவிவர தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் முதல் திட்டக்குழு ஆணையத்தின் உறுப்பினரான இவர் திட்ட குழு என்ற கருத்தை இந்தியாவுக்குக் கொண்டுவந்த முன்னோடி என்று கருதப்படுகிறார். 1932ஆம் ஆண்டில் இந்தியாவின் புள்ளிவிவர நிறுவனத்தை (ஐ.எஸ்.ஐ) இவர் நிறுவினார்.
சிறந்த கல்விப் பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர், கொல்கத்தாவில் உள்ள பிரம்மோ பாய்ஸ் பள்ளியில் படித்தார். பின்னர் பிரசிடென்சி கல்லூரியில் இயற்பியல் பயின்றார். 1912ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த பின், கேம்பிரிட்ஜ் கிங்ஸ் கல்லூரிக்குச் சென்றார், அங்கு கணிதவியலாளர் சீனிவாச ராமானுஜரை சந்தித்தார். ரவீந்திரநாத் தாகூரின் செயலாளராகவும் பணியாற்றினார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வெல்டன் நினைவு பரிசு மற்றும் லண்டன் ராயல் சொசைட்டியின் ஃபெலோ ஆகியவற்றை இவர் பெற்றுள்ளார். 1923ஆம் ஆண்டு, கல்வியாளர் ஹெரம்பச்சந்திர மைத்ராவின் மகள் நிர்மலா குமாரி என்பவரை மணம் புரிந்த மஹலனோபிஸ் 1972 ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி காலமானார்.
இதையும் படிங்க:பயங்கரவாதிகளற்ற மாவட்டமான தோடா- காஷ்மீர் காவலர்கள்