தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேசிய விளையாட்டு விருதுகள்: விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு - தேசிய விளையாட்டு விருதுகள் விண்ணப்பம் செய்வதற்கான தேதி ஒத்திவைப்பு

டெல்லி : தேசிய விளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இம்மாதம் 22ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக மத்திய விளையாட்டுத் துறை அறிவித்துள்ளது.

national sports award
national sports award

By

Published : Jun 4, 2020, 4:50 PM IST

2020ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், இந்த அறிவிப்பை மத்திய விளையாட்டுத் துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "கோவிட்-19 ஊரடங்கைக் கருத்தில்கொண்டு தேசிய விளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி ஜூன் 22ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது.

மேலும், இந்த விருதிற்கு விளையாட்டு வீரர்கள் தங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். உங்களது விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மீண்டும் பரிசோதனையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்!

ABOUT THE AUTHOR

...view details