ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் தேர்தல் பரப்புரை சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி அங்குள்ள குருசேத்திரா நகரில் நடந்த தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டார். அப்போது அவர், "ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது உங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லையா?
தேச பாதுகாப்பே முக்கியம் - பரப்புரையில் கர்ஜித்த நரேந்திர மோடி - மோடி தேசிய பாதுகாப்பு
சண்டிகர்: தேர்தல்கள் வரும், போகும் ஆனால் தேசிய பாதுகாப்பே எப்போதும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி ஹரியானா மாநில தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்துள்ளார்.
நம் நாடு வலிமை அடைவதில் நாம் மகிழ்ச்சி கொள்கிறோம். ஆனால், காங்கிரஸ் எதிர்மறையாக சோகத்தில் உள்ளது. அரசியல் தொடர்கிறது. தேர்தல் வரும், போகும். ஆனால், தேச பாதுகாப்பே முக்கியம். ஜம்மு-காஷ்மீரிலிருந்து பயங்கரவாதத்தினையும் பிரிவினைவாதத்தினையும் துடைத்தெறியும்வரை இதுவே தொடரும்.
முன்பை விட தற்போது ஹரியானா மாநிலம் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. விளையாட்டுத் துறையின் மையமாக மாநிலத்தை உருவாக்க வேண்டும்" என்றார். ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் அக்டோபர் 24ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.