தென்னிந்திய தேசிய பாதுகாப்பு முகமை மேஜர் ராஜேஷ் தாகூர் தலைமையிலான அலுவலர்கள் குழு ஆய்வு மேற்கொள்ள இன்று புதுச்சேரி வந்தனர். அப்போது, சட்டப்பேரவை அலுவலகம், முதலமைச்சர் அலுவலகம், அமைச்சர்கள் அறைகள், அங்குள்ள பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியவை குறித்த தகவல்களை அவர்கள் சேகரித்தனர். மேலும், சட்டப்பேரவை உள்புற, வெளிப்புற பாதுகாப்பு குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரியில் தேசிய பாதுகாப்பு முகமை அலுவலர்கள் திடீர் ஆய்வு! - புதுச்சேரியில் தேசிய பாதுகாப்பு முகமை அலுவலர்கள் திடீர் ஆய்வு!
புதுச்சேரி : சட்டப்பேரவை, பிரஞ்ச் தூதரகம் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய பாதுகாப்பு முகமை அலுவலர்கள் இன்று (அக்.19) திடீர் ஆய்வு நடத்தினர்.
புதுச்சேரியில் தேசிய பாதுகாப்பு முகமை அலுவலர்கள் திடீர் ஆய்வு!
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட, தேசிய பாதுகாப்பு முகமை அலுவலர்கள், ஆளுநர் மாளிகை, பிரெஞ்சு தூதுவர் அலுவலகம், அரபிந்தோ ஆசிரமம் உள்ளிட்ட பகுதிகளையும் ஆய்வு செய்து பாதுகாப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தனர். இரவு நேர, பகல் நேர பாதுகாப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.