நாடு முழுவதும் வரும் ஜனவரி 31ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கு முகாம் நடைபெறும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜனவரி 31இல் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்! - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
டெல்லி: போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை, ஜனவரி 31 நடத்திட மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி வழங்கும் முகாம் வரும் 16ஆம் தேதி நடைபெறும் காரணத்தினால், ஜனவரி 17ஆம் தேதி நடைபெறவிருந்த போலியோ முகாமை, ஜனவரி 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்க குடியரசு தலைவர் முடிவு செய்துள்ளதாக" குறிப்பிடப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், 2021 ஜனவரி 30ஆம் தேதி "போலியோ ரவிவர்" என்று அழைக்கப்படும் போலியோ தேசிய நோய் தடுப்பு முகாமை காலை 11.45 மணியளவில் ராஷ்டிரபதி பவனில் சில குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகளை வழங்கி தொடங்கி வைப்பார் எனக் கூறப்படுகிறது.