Latest National News நிலவை ஆராய அதன் தென் துருவத்தில் தரையிறங்கும் வகையில் சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் விண்ணில் செலுத்தியது. நிலவில் தரையிறங்க சிறிது நேரமே இருந்த நிலையில், இஸ்ரோ லேண்டருடான தொடர்பை இழந்தது. நிலவின் மேற்பகுதியில் லேண்டர் இருப்பது தெரியவந்தாலும், அதைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், "சந்திரயான் 2இன் ஆர்பிட்டர் என்ற சுற்றுகலன் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறது. லேண்டரை எங்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால் சுற்றுகலன் செயல்பாடு சிறப்பாகவுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.