தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'சுவாமி விவேகானந்தரின் தத்துவத்திலிருந்து பிறந்ததே புதிய கல்விக் கொள்கை' - சுவாமி விவேகானந்தரின் 157ஆவது பிறந்தநாள்

பாஜக தலைமையிலான மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கை சுவாமி விவேகானந்தரின் தத்துவத்திலிருந்து ஈர்க்கப்பட்டு, தேசத்தைக் கட்டியெழுப்ப உருவாக்கப்பட்டது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

National Education Policy inspired by philosophy of Swami Vivekananda: PM Modi
National Education Policy inspired by philosophy of Swami Vivekananda: PM Modi

By

Published : Jan 12, 2021, 3:01 PM IST

டெல்லி:சுவாமி விவேகானந்தரின் 157ஆவது பிறந்தநாளையொட்டி, இன்று நாடு முழுவதும் தேசிய இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நடைபெற்ற இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், "இந்தியாவில் இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை அரசாங்கம் உருவாக்கி வருகிறது. இது இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வழங்குவது போன்ற வேலைவாய்ப்புகளை வழங்குகிறது.

சுவாமி விவேகானந்தர் எப்போதும் மன மற்றும் உடல் வலிமையின் வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். ஒருவருக்கு இரும்பு தசைகள் மற்றும் எஃகு நரம்புகள் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தின் ஃபிட் இந்தியா இயக்கம் மற்றும் தேசிய கல்வி கொள்கை அவரது தத்துவத்தால் ஈர்க்கப்பட்டவை. புதிய கல்விக் கொள்கை பாடநெறி கட்டமைப்பில் நெகிழ்வுத் தன்மையை வழங்குவதன் மூலம் தனிநபர் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. அதுமட்டுமின்றி, தேசத்தைக் கட்டியெழுப்பும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க:புதிய கல்விக் கொள்கை 2020: உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தும் மத்திய அமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details