கடந்த ஜூலை 29ஆம் தேதி அறிவிக்கப்பட்ட புதிய கல்விக்கொள்கை (2020), அளவில் பரந்ததாக உள்ளது, நாட்டின் கல்வி கட்டமைப்பை மாற்றியமைக்க முற்படுகிறது. இக்கொள்கை, ஆரம்ப மற்றும் உயர்கல்வியை முழுமையாக மாற்றியமைக்க விரும்புகிறது. இக்கொள்கையில் கட்டமைப்பு மற்றும் கல்வி அம்சங்கள் இரண்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. புதிய கல்வி கொள்கையானது எட்டு கொள்கைகளால் முன்வைக்கப்படுகிறது, அவை:
- பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி கல்வி
- பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் வளங்கள்
- மாணவர்களின் முழுமையான வளர்ச்சி
- உள்ளடக்கம்
- மதிப்பீடுகள்
- பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பு
- ஆசிரியர் ஆட்சேர்ப்பு / ஆசிரியர் கல்வி
- அரசு துறைகள் / அமைப்புகள் / நிறுவனங்களின் பங்கு
கல்வியின் இந்த முக்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றத்தின் வாயிலாக, கல்விக்கான செலவிடுதலை கணிசமான அதிகரித்தல் மற்றும் 2035ஆம் ஆண்டுக்குள் மொத்த சேர்க்கை விகிதத்தை 50% ஆக அதிகரிக்க அரசு முற்படுகிறது. "இந்தியாவை உலகளாவிய அறிவு வல்லரசாக" மாற்றுவதற்கான இறுதி இலக்கைக் கொண்டு கல்வி முறையில் புதுமை மற்றும் படைப்பாற்றல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கல்வி ரீதியாக இது ஆரம்ப மற்றும் உயர் கல்வி ஆகிய பாடத்திட்டங்களில் ஆழமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
பள்ளி அளவில் மிக முக்கியமான வாய்ப்பு என்னவென்றால், "குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு வரை கற்பித்தலை தாய்மொழி வழியில்" ஊக்குவிப்பதை கூறலாம். கல்வித்துறைகளை தொழிற்கல்வியுடன் ஒருங்கிணைக்கும் தாராள தாராள கலைத்திட்டம் என்ற அணுகுமுறைக்கு முக்கியத்துவம் தருவது குறிப்பிடத்தக்கது. பள்ளிக்கல்வியானது அடித்தள நிலை (வயது 3 முதல் 8 வயது வரை), தயார்ப்படுத்துதல் நிலை (8 வயது முதல் 11 வயது வரை); நடுநிலை கல்வி (11 வயது முதல் 14 வயது வரை) மற்றும் மேல்நிலை கல்வி (14 முதல் 18 வயது வரை) என்பவற்றை உள்ளடக்கி இருக்கிறது.
தாராள கலைத்திட்ட அணுகுறை மற்றும் இணக்கமான தொழிற்கல்வி மீதான இத்தகைய உந்துதல், உயர்கல்வியில் மேற்கொள்ளப்படுகிறது, அங்கு இது விருப்ப அடிப்படை மதிப்பீட்டு முறை அதாவது சாய்ஸ் பேஸ்டு கிரடிட் சிஸ்டம் (சிபிசிஎஸ்) வாயிலாக வளர்க்கப்பட உள்ளது. உயர்கல்வியில் தாராள கலைத்திட்டம் கல்வித்துறைகளை தொழிற்கல்வியுடன் இணைக்கிறது மற்றும் எந்தவொரு துறையிலும் / படிப்பு தொடர்பாகவும் மாணவரின் முக்கியத்திறனை அது வலியுறுத்தவில்லை.
மேலும், கலை மற்றும் அறிவியலில் தற்போதுள்ள மூன்று ஆண்டு இளங்கலை படிப்பு என்பது இனி நான்கு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட உள்ளது. இருப்பினும் ஓராண்டு (சான்றிதழ் திட்டம்), இரண்டு ஆண்டுகள் (டிப்ளோமா திட்டம்) அல்லது மூன்று ஆண்டுகள் (பட்டப்படிப்பு திட்டம்), இதில் மாணவர்கள் எந்த ஆண்டில் இருந்தும் வெளியேறும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஆராய்ச்சியில் ஈடுபட விரும்புவோர் மட்டும் நான்காம் ஆண்டை தேர்வு செய்ய வேண்டும். மாணவர்களின் வருகையை ஊக்குவிட்டும் வகையில் அவர்களது வருகை நாட்களை சேர்த்து வைக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது; அத்துடன், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் அந்த பாடத்திட்டத்தில் அவர்கள் சேர முடியும்.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை, கல்வி அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்வதில் தொடங்கி, உயர்கல்வி நிறுவனங்களின் விரிவான மறுசீரமைப்பை புதிய கல்விக்கொள்கை முன்மொழிகிறது. பிரதமரின் தலைமையில் ஒரு மையப்படுத்தப்பட்ட ராஷ்டிரிய சிக்சா ஆயோக் (ஆர்.எஸ்.ஏ), கல்வி வளங்கள் மற்றும் தலைமுறை திறன்கள், பரவச் செய்தல் மற்றும் நகர்வு ஆகியவற்றுடன் தொடர்புடைய அனைத்து நிலைகளையும் செயல்முறைகளையும் தீர்மானிக்கும், கண்காணிக்கும், மற்றும் ஒழுங்குபடுத்தும் ஒரு உயர் அமைப்பாக இருக்கும். இதில் மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசுடன் தொடர்புடைய மூத்த அதிகாரிகள் உள்ளனர்.
ராஷ்டிரிய சிக்சா ஆயோக் - ஆர்எஸ்ஏ, அதன் செயற்குழு மூலம் பணிகள், நிதி ஒதுக்கீடு, திட்டங்களை மறுஆய்வு செய்தல் மற்றும் தனித்தனியே நிதி அளிக்கும் அமைப்புகளை கண்காணித்தல், தரம் நிர்ணயித்தல், உயர்கல்வி நிறுவனங்களை (HEIs) ஒழுங்குபடுத்துதல் பணிகளை மேற்கொள்ளும். தனியார் மற்றும் பொது உயர்கல்வி நிறுவனங்களுக்கான சீரான ஒழுங்குமுறை மற்றும் விளைவுகளின் அளவுருக்கள் உருவாக்கப்படும். இணைப்பு வகை பல்கலைக்கழகங்களை மாற்றியமைக்க இக்கொள்கை முன்மொழிகிறது, அவை மூன்று வகையான நிறுவனங்களால் மாற்றப்பட உள்ளன - பலதரப்பட்ட ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் (வகை 1), பலதரப்பட்ட கற்பித்தல் பல்கலைக்கழகங்கள் (வகை 2), மற்றும் தன்னாட்சி பன்முகக் கல்லூரிகள் (வகை 3). ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யவும் தக்கவைக்கவும் தகுதி அடிப்படையிலான அளவுகோல்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.