இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் பரிந்துரையின் படி இந்தியாவில் தேசிய டெங்கு தினம் மே 16ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
புதுச்சேரியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி!
புதுச்சேரி: சுகாதாரத்துறை சார்பில் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணியை, சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த் குமார் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணியை அம்மாநில சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த் குமார் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில் சுகாதாரத்துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு டெங்கு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாகச் சென்றனர்.
முன்னதாக, காந்தி சிலை அருகே டெங்கு விழிப்புணர்வு கண்காட்சியில் இடம்பெற்ற அரங்கை சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த் குமார் தொடக்கி வைத்தார். இந்த அரங்குகளில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவது குறித்தும், வீட்டின் அருகே பழைய டயர்கள் மற்றும் தேங்காய் மட்டைகளை உபயோகிக்க வேண்டாம் என்பது குறித்தும், பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்தும் அரங்கில் விழிப்புணர்வு பதாதைகள் இடம்பெற்றன. டெங்கு விழிப்புணர்வு கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.