காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போ பேசிய அவர், "குடியரசு தலைவர் பங்கேற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ரபிஹா வெளியேற்றப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. குடியரசுத் தலைவர் வருகை விவகாரத்தில் கிரண்பேடி அதிகளவில் தலையீடு செய்தார். இதனால் மாணவியை வெளியேற்றியதில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தொடர்பு இருக்கிறதா? என விசாரிக்க வேண்டும்.
பாஜகவின் அறிவிக்கப்படாத தலைவராக மாறிவிட்ட கிரண்பேடி, புதுச்சேரி ஆளுநர் மாளிகையை பாஜக அலுவலகமாக மாற்றிவிட்டார். மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஹிஜாப் அணிந்ததால் அனுமதிக்கவில்லையா? அதற்கான காரணங்கள் என்ன? குடியரசுத் தலைவர் இதுகுறித்த கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். அந்த மாணவி ராஷ்ட்ரபதி பவனுக்கு அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.