தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்ட 'ஆம்பன்' புயல், அதிதீவிரப் புயலாக மாறி மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே கரையைக் கடந்தது. இதனால் மேற்கு வங்க மாநிலம், கடுமையான பாதிப்பிற்குள்ளாகியது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, 'ஆம்பன் புயலால் மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைக் காணொலி மூலம் கண்டேன். இந்தக் கடினமான காலத்தில் மொத்த நாடும் வங்க தேசத்திற்கு துணை நிற்கும். அந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் விரைவில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து வெளிவர பிரார்த்தனை செய்கிறேன்’ என்றார்.
மேலும் அவர், ’தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயர் மட்டக் குழுவினர் பாதிப்பிற்குள்ளாகிய பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். புயல் பாதிப்பிலிருந்து அம்மாநிலம் மீண்டுவர மாநில அரசுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்’ என்றார்.